இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலையில் உற்பத்தி தொடக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலை தனது முழு உற்பத்தியை நேற்று தொடங்கியது.
தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் அணையில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.
423 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலை நவீன தொழில்நுட்பங்களுடன், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அணை நீரின் மேல், மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் ஆவியாவதையும் தடுக்க முடியும். அதாவது ஆண்டுக்கு 32.5 லட்சம் கியூபிக் மீட்டர் வரை தண்ணீர் ஆவியாவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments