தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.!

0 1572

தமிழகத்தில் 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 3, 4, 5, 6 ஆகிய நாட்களில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஜூலை 5, 6 ஆகிய நாட்களில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒருசில பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments