"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அதானி, அம்பானியின் சொத்து மதிப்பு அதிகரிப்பு.!
உலக பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ள நிலையில், இந்திய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
உலக நாடுகளில் வங்கி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் எலான் மஸ்க், ஜெஃப் பிசோஸ், மார்க் ஸக்கர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பு தலா 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவடைந்தது.
அதேநேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
அவரின் மொத்த சொத்து மதிப்பு 7 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இதோபோல ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து 23 ஆயிரத்து 685 கோடி ரூபாய் அதிகரித்து, 7 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
Comments