ஒரே நாளில் 292 விமானங்களை விற்க ஒப்பந்தம் பெற்றது ஏர்பஸ்.!

0 11376

ஒரே நாளில் 292 விமானங்களுக்கு ஒப்பந்தம் பெற்ற நிலையில், ஏர்பஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்துள்ளன.

சீன அரசுக்குச் சொந்தமான 4 விமான நிறுவனங்கள் நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர்பஸ் விமான நிறுவனத்திடமிருந்து 292 விமானங்களை வாங்குவதற்கு ஒரே நாளில் ஒப்பந்தம் மேற்கொண்டன.

குறிப்பாக சீனா ஈஸ்ட்ரன் ஏர்லைன்ஸ் 100 விமானங்களையும், சீனா சதர்ன் நிறுவனம் 96 விமானங்களையும் வாங்குகின்றன. இது தங்களது விமானத்தின் செயல்திறன், தரம், எரிபொருள் சிக்கனம் மற்றும் நிலைத்தன்மையை எடுத்துக் காட்டுவதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments