தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க கட்டிகளை கொடுத்து மோசடி செய்த மர்ம கும்பல் - போலீஸ் விசாரணை
கோவையில் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்க கட்டிகளை கொடுத்து ஐந்து லட்சம் ரூபாயினை மோசடி செய்த மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மண்ணரை பசும்பொன் நகரை சேர்ந்த பாலு என்பவரின் ஓட்டலில் உணவு அருந்த சென்ற 3பேர் கொண்ட கும்பல் தங்களிடம் உள்ள தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்க முயற்சி செய்வதாக கூறியுள்ளனர்.
இதனை உண்மை என்று எண்ணிய பாலு அவர்கள் சொன்னபடி 5 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு சென்று கொடுத்து தங்க கட்டிகளை வாங்கி சென்றார். பின்னர் அவற்றை சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலியான தங்கம் என தெரியவந்தது.
Comments