டெலாவேர் விரிகுடா கடற்கரை பகுதிகளுக்கு வந்த குதிரைலாட நண்டுகள்.. பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசிப்பு..!
அமெரிக்காவின் டெலாவேர் விரிகுடா கடற்கரைப்பகுதிகளுக்கு ஏராளமான குதிரைலாட நண்டுகள் வந்திருப்பதை பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
அதிக அலை இருக்கும் பகுதியில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்வதற்காக ஆண்டு தோறும் மே மற்றும் ஜூன் மாதங்களில் டெலாவேர் விரிகுடா கடற்கரை பகுதிகளுக்கு குதிரைலாட நண்டுகள் வருவது வழக்கம்.
அவை குறைவான ஆழம்கொண்ட மணற்பாங்கான அல்லது சேற்றுப்பாங்கான பகுதியில் தான் பெரும்பாலும் இனப்பெருக்கம் செய்கின்றன.
450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த உயிரினங்கள் வாழ்ந்து வரும் சூழலில் இவை கடல் சார் வாழும் புதைபடிமங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் நீல நிற ரத்தம் தடுப்பூசி மருந்துகள் பாதுகாப்பானவையா என சோதிக்க பயன்படுகிறது.
Comments