ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - டெல்லி அரசு அதிரடி
டெல்லியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களை தடையை மீறி பயன்படுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் கோபால் ராய் எச்சரித்துள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி வரை கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அதனை மீறி பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Comments