உக்ரைனில் இருந்து வெளியேறியவர்களின் புகலிடமான இஸ்கான் கோவில்.. கொடூர தாக்குதல்களை மறக்கத் தொடங்குவதாக தகவல்..!
அயர்லாந்தின் இனிஸ் ராத் தீவில் அமைந்துள்ள இஸ்கான் கோவில், உக்ரைனின் மரியுபோல் நகரில் இருந்து வெளியேறிய மக்களின் புகலிடமாக மாறியுள்ளது.
இஸ்கான் என்று அறியப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான பக்தர்களை கொண்டுள்ளது.
அப்படி, உக்ரைனின் மரியுபோலில் இருந்த கிருஷ்ண பக்தர்கள், போர் பாதிப்பினால் அங்கிருந்து வெளியேறி இந்த இஸ்கான் கோவிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மான்கள் மற்றும் மயில்கள் சுற்றித் திரியும் இந்த அழகிய தீவில் இருக்கும் போது, பேரழிவிற்குள்ளான மரியுபோலின் கொடூர தாக்குதல்களை பற்றிய நினைவுகளில் இருந்து தாங்கள் மீளத் தொடங்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
Comments