தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற கிளை தடை
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார் 13 ஆயிரம் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்புவதற்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தற்காலிகமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் தகுதியற்றவர்கள் பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறிய நீதிபதி, வழக்கை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments