அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவர் கைது

0 1569
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்த இருவர் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மதுரை ஆட்சியர் அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி ஒரு கோடியே 26 லட்ச ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முனீஸ்வரன் என்பவன் தனக்கு அறிமுகமான சேகர் என்பவரின் மகனுக்கும், மகளுக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 லட்ச ரூபாய் பெற்று கொண்டு, பின் அவர்களது வீட்டிற்கு போலி பணி ஆணைகளை அனுப்பி உள்ளான்.

26 பேரிடம், ஒன்றரை லட்ச ரூபாய் முதல் 8 லட்ச ரூபாய் வரை, என மொத்தம் ஒன்னேகால் கோடி ரூபாய் வசூலித்த முனீஸ்வரன், அவர்களுக்கும் பணி ஆணைகளை அனுப்பி உள்ளான்.

பல நாட்கள் ஆகியும் வேலைக்கு அழைக்கப்படாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து முனீஸ்வரனும், அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments