எங்க வீட்டு பெண் மீதா கைவக்கிற..? மாணவியிடம் அத்துமீறியவரை சம்ஹாரம் செய்த குடும்பம்..!
பள்ளிக்கூடம் சென்று வந்த தங்கள் வீட்டு சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்து போக்சோ வழக்கில் கைதான பேருந்து ஓட்டுனர், ஜாமீனில் வெளியே வந்த ஆத்திரத்தில் அந்த சிறுமியின் தந்தை , சகோதரர்கள் என குடும்பமே சேர்ந்து திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சம்பவம் செய்யாறு அருகே அரங்கேறி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் , செய்யாறு அடுத்த பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமலை இவரது மனைவி ரேவதி இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.
இவர்களது 16 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வயிற்றுவலியால் துடித்த மகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
விசாரணையில் அதே ஊரை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் முருகன் என்பவர் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததும் வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் புகாரின் பேரில் முருகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 27 ந்தேதி முருகனை அவரது மனைவி ஜாமீனில் வெளியே எடுத்து வந்தார்.
முருகன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த தகவல் அறிந்ததும் தணிகைமலை குடும்பத்தினர் அவரது வீட்டுக்கே சென்று தங்கள் வீட்டு பெண் மீது கைவைத்ததற்கு தக்க பதில் அடி கொடுப்போம் என்று வீட்டுக்கே வந்து பகிரங்கமாக மிரட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தைலமரக்காட்டிற்கு சென்ற முருகனை பின் தொடர்ந்து சென்ற மர்மக்கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.
உயிருக்கு போராடிய முருகனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.
இதையடுத்து முருகனின் மனைவி போலீசில் அளித்த புகாரில் தனது கணவனை , திட்டமிட்டு தணிகை மலையும் அவரது மகன்களும் சேர்ந்து கொலை செய்ததாகவும் தடுக்கச்சென்ற தங்களையும் வெட்டுவதற்கு வந்ததாக தெரிவித்தார்.
இதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தணிகைமலை அவரது இரு மகன்களை கைது செய்தனர்.
மனைவியும் 3 குழந்திகளும் இருக்கும் நிலையில் முருகன், காதலிப்பதாக கூறி தங்கள் வீட்டு பெண்ணின் மனதை கெடுத்து , வீட்டில் ஆள் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, சிறுமி என்றும் பாராமல் அவளது வாழ்க்கையையும் சீரழித்ததால் பழிக்கு பழிவாங்கும் நோக்கில் காத்திருந்ததாகவும், போக்சோ வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவன் சில மாதங்களில் ஜாமீனில் வெளியில் வந்து சுதந்திரமாக சுற்றியதால் உண்டான ஆத்திரத்தில் இந்த கொலை சம்பவத்தை செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments