மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி - சி 53 ராக்கெட்

0 1196

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 6 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது.

வணிக ரீதியாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.- சி53 மூலம் தெளிவான வண்ணப் படங்களை எடுக்கும் திறன்கொண்ட டி.எஸ். - இ.ஓ. செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதனுடன் அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் 'நியூசர்' மற்றும் கல்விப் பணிக்காக நன்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய 'ஸ்கூப்-1' செயற்கைகோள்களும் ஏவப்பட்டன.

மூன்று செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments