உக்ரைனுக்கு மேலும் ஒரு பில்லியன் பவுண்டுகள் ராணுவ உதவி - பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு
உக்ரைனுக்கு மேலும் 1 பில்லியன் பவுண்டுகள் ராணுவ உதவிகள் வழங்கப்படும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இன்று நடைபெற்ற நேட்டோ தலைவர்கள் மாநாட்டில் இதனை அவர் அறிவித்தார். புடினின் மிருகத்தனம் தொடர்ந்து உக்ரைன் மக்களின் உயிர்களை பறிக்கிறதாகவும், ஐரோப்பா முழுவதும் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்த போரிஸ் ஜான்சன், உக்ரைனில் புடின் தோல்வியடைவதை உறுதி செய்வதற்காக தாங்கள் உக்ரைன் மக்கள் பின்னால் நிற்போம் என்றும் தெரிவித்தார்.
Comments