டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால்தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? : அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக் போல வருமானம் கிடைத்தால் தான் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? எனத் தமிழக அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் வினவியுள்ளது.
காடுகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற 5 கோடியே 36 இலட்ச ரூபாய் ஒதுக்கியுள்ளதாகவும், ரசாயன முறைப்படி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்நிய மரங்களால் உள்நாட்டு மரங்கள் அழிவதை ஒப்புக் கொள்ளும் அரசு, அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு என்ன செய்துள்ளது? என நீதிபதிகள் வினவினர்.
அந்நிய மரங்களால் வனத்துக்கும், விலங்குகளுக்கும் ஆபத்து உள்ளதாகவும், எதிர்காலத்தில் சரணாலயங்கள் அழிந்து விடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.
Comments