கழிவறை நீரில் இருந்து பீர் : செம டேஸ்ட் என குடிமகன்களிடம் வரவேற்பு
சிங்கப்பூரில், மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட கழிவறை நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட பீருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சிங்கப்பூர் அரசு ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கழிவு நீரில் உள்ள அசுத்தமான துகள்களை அகற்றி, பின் புற ஊதாகதிர்வீச்சின் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழித்து, இறுதியாக சுத்திகரிக்கப்பட்ட நீரை நியூவாட்டர் என்ற பெயரில் விற்பனை செய்தது.
அந்த நியூவாட்டரை மூலப்பொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நியூபுரூ என்ற பீர் வகை குடிமகன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Comments