கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட தையல் கலைஞர் குடும்பத்திற்கு முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் சென்று ஆறுதல்..!
ராஜஸ்தானில் கொல்லப்பட்ட தையல் கலைஞர் குடும்பத்தை, முதலமைச்சர் அசோக் கெலாட் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக கூறி, உதய்பூரைச் சேர்ந்த கன்னையா லால் என்பவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் உதய்பூருக்கு தனி விமானத்தில் சென்ற முதலமைச்சர் அசோக் கெலாட், கன்னையா லாலின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதனிடையே கன்னையா லாலின் கொலையை கண்டித்து உதய்பூர் நகரில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது.
Comments