சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்
மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், ஜூலை 1ஆம் தேதி 10 மாவட்டங்களிலும், ஜூலை 2ஆம் தேதி 5 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
லட்சத்தீவு, கேரளா கடலோரப் பகுதிகளிலும், மன்னார் வளைகுடா பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments