போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபர் கொலை... பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் செய்த சம்பவம்

0 12059

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்தனர்.

பாண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை,  திருமணமாகி 3 குழந்தைகளுக்கு தந்தையான முருகன் என்பவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், முருகன் கடந்த வாரம் ஜாமீனில் வெளியேவந்துள்ளான்.

இந்நிலையில், இன்று காலை வீட்டின் பின்புறம் உள்ள தைலமர தோப்பில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது சிலர் முருகனை கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விசாரணையில் முருகனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையும், இரண்டு அண்ணன்களும் சேர்ந்த முருகனை கொலை செய்தது தெரியவந்தது. அவர்கள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments