காணிக்கையாகக் கிடைத்த 130.5 கிலோ தங்கம்.. பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தார் அமைச்சர் சேகர்பாபு..!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் காணிக்கையாகக் கிடைத்த தங்கத்தை வங்கியில் முதலீடு செய்வதால் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
130 கிலோ 512 கிராம் தங்கத்தை பாரத ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தங்கத் தேர் செய்யும் பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Comments