பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக சீனாவுக்கு நேட்டோ நாடுகள் கண்டனம்
சீனாவுக்கு நேட்டோ மீதான எதிர்ப்பு மற்றும் ரஷ்யாவுடனான நெருக்கம் பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்குவதாக நேட்டோ மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய மூன்று நாள் நேட்டோ நாடுகளின் மாநாடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்நிலையில் சீனாவின் செயல்பாடுகள் நேட்டோ கூட்டமைப்புக்கு எதிராக இருப்பதாகவும் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கும் மதிப்பீடுகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நேற்று வெளியிடப்பட்ட நேட்டோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments