21 ஆண்டுகால முன்விரோதம்.. கூலித் தொழிலாளியை, வெட்டிக் கொலை செய்த தந்தை, மகன்கள்..
சென்னை புளியந்தோப்பில், 21 ஆண்டுகால முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை, வெட்டிக் கொலை செய்த தந்தை, மகன்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புளியந்தோப்பைச் சேர்ந்த சுரேஷ், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
சந்தேகத்தின் பேரில் முரளி என்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரித்ததில், கடந்த 2001ம் ஆண்டு சுரேஷ், முரளியின் தந்தை கிருஷ்ணனை கத்தியால் வெட்டியதில் அவரது இடது கை பாதி ஊனம் ஆனது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது.
அதோடு கிருஷ்ணனின் மகன்கள் புளியந்தோப்பு பகுதிக்கு செல்லும் போதெல்லாம் அவர்களை சுரேஷ் மிரட்டியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன், முன்விரோதத்தை தீர்க்க மகன்களை தூண்டிவிட்டு சுரேஷை கொலை செய்ததும் தெரியவந்தது
Comments