ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
கோவையின், பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சிகுளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், குளக்கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் குறிச்சி குளக்கரை காந்திநகர் பகுதிகளில் உள்ள 173 ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை வீடுகள் காலி செய்யப்படாததால், முதற்கட்டமாக 42 வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயங்திரங்களை கொண்டு அதிகாரிகள் இடித்து தள்ளி ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
Comments