ஆர்.ஜே.டி.யில் இணைந்த ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர்..
பீகாரில் ஓவைசி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேர், ராஷ்டீரிய ஜனதா தள கட்சியில் இணைந்தனர்.
மொத்தம் 5 பேர் இருந்த நிலையில், நால்வர் இணைந்துள்ளதாக தேதஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பீகார் சட்டப்பேரவையில் தங்களது கட்சி மிகப்பெரிய கட்சியாக மாறியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பீகாரில் பாஜக ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Comments