அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

0 8936
அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழப்பு

ஈரோடு அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் நிலைதடுமாறி கீழே விழுந்து லாரிக்கு அடியில் சிக்கி உயிரிழந்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது மாணவன் கிரண், தனது தம்பியை அழைத்து வருவதற்காக தந்தையின் இருசக்கர வாகனத்தில் சிவகிரி நோக்கி சென்று கொண்டிருந்தான்.

அம்மன் கோவில் அருகே அதிவேகமாக பைக்கைச் ஓட்டிச் சென்ற கிரண் முன்னே சென்ற சரக்கு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது அந்த வாகனம் திடீரென நின்றதால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிலைதடுமாறி பைக்குடன் கீழே விழுந்தான்.

அப்போது எதிரே வந்த லாரி கிரண் மீது ஏறி, இறங்கியதில் நிகழ்விடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தான்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments