நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம்

0 7402
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் உடல் சென்னை பெசன்ட் நகரில் தகனம் செய்யப்பட்டது.

நுரையீரல் மற்றும் இருதயப் பிரச்னை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யா சாகர் நேற்றிரவு உயிரிழந்தார்.

சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், பிரசன்னா, நடிகைகள் குஷ்பூ, ரம்பா, சினேகா, இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நடிகை மீனா கண்ணீர் மல்க தனது கணவருக்கு முத்தமிட்டு இறுதி சடங்குகளை செய்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments