பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு யுவான் கரன்சியில் கடன் வழங்க சீனா முடிவு.!
சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு, பணம் தேவைப்படும் சிறு நாடுகளுக்கு தனது நாட்டு கரன்சியில் கடன் வழங்க முடிவு செய்து, யுவான் நிதித் தொகுப்பு ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.
இதற்காக சீனாவின் மத்திய வங்கி,சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியுடன் (பிஐஎஸ்) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிதி தொகுப்பு ஒப்பந்தத்தில் சீனாவுடன் இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சிலி ஆகிய 5 நாடுகள் இணைந்துள்ளன
Comments