பக்தர்கள் வருகையால் விழாக் கோலம் பூண்ட அமர்நாத்.. யாத்திரையை ஒட்டி ராணுவம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!
அமர்நாத் யாத்திரை இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை தொடங்க உள்ளது.
இதனை முன்னிட்டு அனுமதி பெற்ற பக்தர்கள் ஜம்மு மலையடிவார முகாமில் திரண்டுவருகின்றனர். நாளை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து யாத்திரையின் முதல் குழுவை அனுப்பி வைக்கிறார்.
அமர்நாத் குகையில் சுயம்புவாகத் தோன்றும் பனிலிங்கம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகிறது. அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி, விடுகிறது. அமர்நாத் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாதை நெடுகிலும் ராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Comments