உதய்பூரில் கலவர சூழல்: இணைய சேவை நிறுத்தம்... அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையுத்தரவு அமல்.!
ராஜஸ்தானில் இந்து தையல்கடைக்காரர் கொலை செய்யப்பட்டதையடுத்து இருபிரிவினரிடையே மோதல் வெடித்துள்ளது.
கண்ணையா லாலின் கொலையைக் கண்டித்து உதய்பூர் உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றன. இதையடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரு மாதகாலத்துக்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.மக்கள் அமைதி காக்கும்படி காவல்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறாதிருக்க காவல்துறையினர் உஷார் நிலையில் இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தையல்கடைக்காரர் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments