அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கான ரூ.200 கட்டணம் ரத்து - பள்ளிக்கல்வித்துறை
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் 200 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டுக்கு பின் 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 2022- 2023 ஆம் கல்வியாண்டிலிருந்து அக்கட்டணம் பெறப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், ஒரு கல்வி ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments