இருசக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் புகுந்த நல்ல பாம்பு... லாவமாகப் பிடித்த தீயணைப்பு வீரர்

0 1543
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு உயிருடன் பிடிபட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த நல்ல பாம்பு உயிருடன் பிடிபட்டது.

திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலரான தினேஷ்குமார், வழக்கம் போல் அவரது இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்துக்கொண்டிருந்தார். அப்போது  வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் வண்டியை நிறுத்தி பார்த்தபோது அதில் பாம்பு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனத்தின் முன்பகுதியில் இருந்த பாம்பை லாகவமாக உயிருடன் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments