உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா மிஸ்டர் காண்ட்ராக்டர்ஸ்..? இப்படியா காங்கிரீட் ரோடு போடுரது..?

0 2924
வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக சாலைக்கு காங்கிரீட் கலவையை கொட்டிச் சென்ற ஒப்பந்த பணியாளர்கள், கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலைபோட்டுச்சென்ற சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

வேலூர் மாநகராட்சியில் இரவோடு இரவாக சாலைக்கு காங்கிரீட் கலவையை கொட்டிச் சென்ற ஒப்பந்த பணியாளர்கள்,  கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனத்தையும் சேர்த்து சாலைபோட்டுச்சென்ற  சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

காளிகாம்பாள் கோவில் தெருவில் வசித்து வரும் சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் சேர்த்தும் காங்கிரீட் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்து போய் வாகனத்தை எடுக்க முயற்ச்சித்துள்ளார். ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் எடுக்கமுடியவில்லை.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்களின் கடமை உணர்ச்சியால் கங்கிரீட்டில் சிறைவைக்கப்பட்ட அவரது இரு சக்கரவாகனத்தை வருவோரு போவோரெல்லாம வியப்பாக பார்த்துச்சென்றனர்.

இரவு 11.00 மணிவரை கடையில் தான் இருந்தோம் அதுவரை சாலை போடவுள்ளதாக எந்த அறிவிப்பும் வழங்கவில்லை என்றும் இரவோடு இரவாக காங்கிரீட் கலவை யை கொட்டி அவசர அவசர மாக சாலை போட்டுள்ளனர். இதில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது வண்டியை நகர்த்தாமல் அதனையும் சேர்த்தே சாலை போட்டு சென்றுள்ளனர் என்று புகார் தெரிவித்த வாகன உரிமையாளர் , இது குறித்து ஒப்பந்ததாரர்களோ அலட்சியமாக பதில் சொல்வதாக தெரிவித்தார்.

இப்போது எங்கள் வண்டி நாசம் ஆகிவிட்டது. முன் அறிவிப்பு கொடுத்திருந்தால் வண்டியை தெருவில் விட்டிருக்க மாட்டோம். அல்லது அவர்களே வண்டியை அப்புரப்படுத்தியாவது சாலை போட்டிருக்கலாம் என்று கூறிய அவர்கள் சாலையை பெயர்த்து தங்கள் வண்டியை மீட்கும் நிலை ஏற்பட்டது.

 சாலை சுத்தமாக தரம் இல்லாமல் கடமைக்கு போட்டுச்சென்றுள்ளதாகவும், தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் காங்கிரீட்டை கொட்டிச்சென்றுள்ளதாகவும், இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது. இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments