"ரஷ்ய அதிபர் புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்".. சீனாவிற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸ் எச்சரிக்கை!
ரஷ்ய அதிபர் புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஜனநாயக நாடுகளை ஒன்றிணைத்ததாக தெரிவித்தார்.
70 ஆண்டுகளாக தனி நாடாக இருக்கும் தைவானை தனி நாடாக ஏற்க மறுத்துள்ளதுடன், தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதி வரும் நிலையில் ஆன்டனி அல்பானீஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments