கோயில் நில ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை தூங்குகிறது - உயர்நீதிமன்றம் அதிருப்தி

0 2252
கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவிலின் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரிய உத்தரவை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

அதன் விசாரணையில், 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் அகற்றப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பல கோவில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் செயல்படாத நிலையே காரணம் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments