இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 78.59 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
பணவீக்க அழுத்தங்கள், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை வளர்ந்து வரும் சந்தை நாணயத்தின் மீது அழுத்தத்தை சேர்ப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ரூபாயின் மதிப்பு 81 ரூபாய் வரை சரியும் எனக் கூறப்படுகிறது.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 3 வாரங்களில் 10.785 பில்லியன் டாலர் சரிந்து, 590.588 பில்லியன் டாலராக உள்ளது.
Comments