உற்பத்தி செலவு அதிகரித்தால் சிறிய வகை கார் தயாரிப்பு நிறுத்தப்படும் - மாருதி நிறுவனம்!
உற்பத்தி செலவுகள் அதிகரித்தால் சிறிய வகை கார் தயாரிப்பை கைவிடப் போவதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் அனைத்து கார்களிலும் ஆறு ஏர் பேக் கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் கார் உற்பத்தி செலவு அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ள மாருதி சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா, சிறிய கார்களால் எவ்வித லாபமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Comments