குளோரின் வாயுவை சுவாசித்த 10 பேர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஜோர்டான் நாட்டில் குளோரின் வாயுவை சுவாசித்த 10 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
மேலும் 251பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Aqaba துறைமுகத்தில் அமைந்துள்ள சேமிப்பு தொட்டியில் இருந்து குளோரின் வாயு கசிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி செய்வதற்காக 25டன் எடை கொண்ட டேங்கரில் குளோரின் வாயு கொண்டு செல்லப்பட்ட போது திடீரென வாயு கசிந்துள்ளது.
இந்நிலையில் அரசு வெளியிட்ட வீடியோவில், சேமிப்பு தொட்டி வின்ச்சில் இருந்து திடீரென கீழே விழுந்து கப்பலின் மேல்தளத்தில் மோதுவதும், அப்போது மஞ்சள்நிற திரவம் வெளியானதை தொடர்ந்து மக்கள் அங்குமிங்கும் ஓடும் காட்சியும் பதிவாகியுள்ளது.
Comments