ரயில் பயணியிடம் ரூ.15.5 லட்சம் பணம் பறிமுதல்.. ஹவாலா பணமா என விசாரிக்க வருமானவரித்துறையிடம் ஒப்படைப்பு.!

0 1289

தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணியிடம் இருந்த 15லட்சத்து 50 ஆயிரம் ரூபாயினை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து வருமானவரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

சோழன் விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்ட திண்டிவனத்தை சேர்ந்த பிச்சை முத்து என்பவர் நிறைய பணம் கொண்டு வருவதாக தாம்பரம் மத்திய ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாம்பரம் ரயில் நிலையத்தில் பிச்சைமுத்துவிடம் விசாரித்த போது கட்டுகட்டாக 15 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இதற்கு உரிய கணக்கு விவரம் இல்லாததால் அந்த பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments