"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இலங்கையில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு எரிபொருள் விற்பனைக்கு தடை
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இலங்கையில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து பணிகளுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம், துறைமுகம், சட்டப் பணிகள், விமானப் பயணம், உணவு மற்றும் விவசாய பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோருக்கு மட்டும் எரிபொருள் விற்க அரசு அனுமதித்துள்ளது.
தனியார் துறை ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், பொதுத் துறை ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
Comments