47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.. பல்வேறு வரிச்சலுகைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பு.!

0 1594

47-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று சண்டிகரில் நடைபெறுகிறது.   வரிக் கணக்கு ஆய்வு, வரி செலுத்துவோர் சரிபார்ப்பு குறித்த முன்மொழிவுகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 47வது ஜி.எஸ்.டி, கவுன்சில் ஆலோசனக் கூட்டம் இன்றும், நாளையும் சண்டிகரில் நடைபெறுகிறது.

ஜி.எஸ்.டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஐந்தாண்டு நிறைவு பெற உள்ள நிலையில், மாநில அரசுகளின் பரிந்துரைகள், வரிச்சலுகைகள், வரிவிதிப்பு வரம்புகளில் மாறுதல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்ட்ரா மாநில நிதி அமைச்சர் அஜித் பவார் தலைமையிலான அமைச்சர்கள் குழு ஜி.எஸ்.டி வரி விதிப்புகளில் உள்ள சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கைகளை கவுன்சிலில் தாக்கல் செய்கிறது. செஸ் வரியை 2026ஆம் ஆண்டு வரை மத்திய நிதி அமைச்சகம் நீட்டித்துள்ளதால், ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் கால வரம்பை நீட்டிக்கக் கோரி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

கேசினோ சூதாட்டம், குதிரைப் பந்தயம், ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளிட்டவைகளை 28 சதவீத ஜிஎஸ்எடி வரம்புக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மின்சார வாகனங்களுக்கான லித்தியம் அயன் பேட்டரி, பேக்கேஜிங் காகிதம், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், உள்ளிட்ட பொருட்களின் வரி விதிப்பு குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிட்மெண்ட் கமிட்டி பரிந்துரைந்த 215-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான வரி விகிதங்களில் தற்போதைய நிலையையே தொடருவது குறித்து ஆலோசிக்கபடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments