மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது.!
மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை உத்தர பிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரியான பாலாஜி என்பவரிடம் மத்திய அரசு நாடு முழுக்க ரேஷன் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக பருப்பு கொள்முதல் செய்து வருவதாகவும் 5 பேர் கும்பல் கூறியுள்ளனர்.
அதனை நம்பி 5 கோடி ரூபாய் மதிப்பிலான பருப்பை பாலாஜி அனுப்பி உள்ளார். பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலாஜி மத்திய குற்றப் பிரிவு போலீசாரிடம் புகாரளித்துள்ளார்.
இந்த கும்பல் பல மாவட்டங்களில் இதே பாணியில் மத்திய அரசின் பெயரில் போலி திட்டங்களை விளம்பரப்படுத்தி வியாபாரிகளிடம் உணவு பொருட்களை கொள்முதல் செய்து அவற்றை மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.
அந்த கும்பலை சேர்ந்த பாண்டியராஜனை என்பவனை ஏப்ரல் மாதம் கைது செய்த போலீசார் இதில் மூளையாக செயல்பட்ட ஜெய்கணேஷ் என்பவனை செல்போன் சிக்னல் மூலம் உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் வைத்து கைது செய்துள்ளனர்.
Comments