அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை.!
சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பினால் வழக்குத் தொடுத்து அபராதம் விதிக்கப் போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வாகனங்களின் ஹார்ன் ஒலி பகலில் 55 டெசிபல், இரவில் 40 டெசிபல் என்னும் அளவுக்குள் இருக்க வேண்டும் என உலக நலவாழ்வு நிறுவனம் பரிந்துரைக்கிறது. அதிக ஒலியால் மனிதர்களுக்கு மன அழுத்தம், உறக்கமின்மை, பதற்றம், இதய நோய் எனப் பல கோளாறுகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
வாகன ஹார்ன் ஒலிமாசைக் கணக்கிட சவுண்ட் லிமிட் என்னும் கருவியை முதன்முறையாகச் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை வாங்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.
Comments