7 வருட காதலுக்கு நடுகல் வைத்த காதலி.. உயிரை விட்ட காதலன்..! உன்னை நினைத்து படம் போல சம்பவம்

0 14187

7 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த பெண், திருமணத்துக்கு முந்தைய நாள் வேறு ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதால் ஏமாற்றத்துக்குள்ளான காதலன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். திருமணம் தடை பட்டுவிடக்கூடாது என்று  திடீர் மணமகளான பெண் வாழ்க்கையை இழந்து தவிக்கும் சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.Tindivanam

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ந.புதூரை சேர்ந்தவர் குமரேசன். கட்டிட தொழிலாளியான இவர் பக்கத்துகிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடந்த 7 வருடமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தின் வறுமை நிலை அறிந்து ஏராளமாக உதவிகள் செய்த குமரேசன், அந்த பெண்ணை ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.

அங்கு நாள் முழுவதும் நிற்பதால் கால் வலிப்பதாக அந்த பெண் வேதனை தெரிவித்ததால் அண்மையில் வேறொரு கடையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் 7 வருட காதலுக்கு மரியாதை செய்யும் விதமாக இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் குமரேசன்.

23 ந்தேதி இருவருக்கும் திருமணம் நடக்க இருந்த நிலையில் 20ந் தேதி அந்தப் பெண் வேறொரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆறுதல் தெரிவித்த குடும்பத்தினர், திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்று குமரேசனுக்கு, வேறு ஒரு பெண்ணை அதே நாளில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் 7 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்தவள் ஏமாற்றி சென்றதை மறக்க இயலாமல் மனம் நொந்து போன குமரேசன் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. அந்த பெண்ணுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ளவில்லை என்றும் முள்ளாய் குத்தும் நினைவுகளை மறக்க இயலவில்லை என்றும் சோகத்துடன் குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.

குமரேசனின் அவசர புத்தியால் ஒரு பாவமும் அறியாமல், அவரை திருமணம் செய்த பெண்ணின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. திடீர் கணவனின் பொறுப்பற்ற அவசர முடிவால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்தபெண் தவித்து நிற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments