புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் வசூலிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை!
போக்குவரத்து விதிமீறல்களுக்கு 10 மடங்கு கூடுதல் அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளை மீறுவோருக்கு அபராதத்தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டது.
குறிப்பாக, தலைக்கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாயில் இருந்து 5,000 ரூபாயாகவும் அபராதத்தொகை உயர்த்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படாமல் உள்ளது.
Comments