ஆஸ்திரேலியாவில் இருந்து வணிக ரீதியான ராக்கெட்டை வெற்றிக்கரமாக விண்ணில் ஏவியது நாசா.!
ஆஸ்திரேலியாவில் இருந்து முதன்முறையாக வர்த்தக ரீதியான ஏவுதளத்தில் இருந்து நாசா தனது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் ராக்கெட் ஏவுதளங்களில் இருந்து நாசா மூன்று ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுகிறது.
இதன் முதல் ராக்கெட் நேற்று நள்ளிரவு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட செயற்கைகோள் மூலம், நட்சத்திரங்களின் ஒளியால் கிரகங்களில் ஏற்படும் தாக்கம் குறித்து ஆய்வு செய்யமுடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments