11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

0 1893

தமிழ்நாட்டில் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், 90 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல் மாணவிகளே மாணவர்களை விட அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய ஒரே ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.  99 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 89 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக கணினி பயன்பாடுகள் பாடத்தில் இரண்டாயிரத்து 186 பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக தாவரவியலில் 3 பேர் மட்டுமே முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாவட்டங்களைப் பொறுத்தவரையில் 95 புள்ளி ஐந்து ஆறு சதவிகித்துடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments