இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு.. எரிபொருள் தட்டுப்பாட்டால் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்..!
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 470 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டர் 460 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதால் ‘டோக்கன்’ முறை அமல்படுத்தப்படுகிறது.
கடன்சுமை, அன்னியச் செலாவணி பற்றாக்குறை, போன்ற பிரச்சினைகளால் பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு தவித்துவருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
இதனிடையே சலுகை விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
Comments