ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள்.. திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது..!

0 1509
ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள்.. திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிடுகிறது..!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது. 

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை டிக்கெட்டுகளைப் பெற பக்தர்கள் இன்று முதல் 29-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.

மேலும் சுப்ர பாத சேவை, தோமால சேவை, அர்ச்சனை, அஷ்டதல பாத பத்மாராதனை சேவை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் எலக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும். இந்த டிக்கெட்டுகளும் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments