திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால் இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாய் கைது!

0 4248

சென்னை வண்ணாரப்பேட்டையில் திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாக, இரண்டரை வயது பெண் குழந்தையின் கையை உடைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.

தமிழரசி என்ற இந்த இளம்பெண்ணுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவர் அவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு இடையூறாக இருந்த குழந்தையை பிரம்பால் தாக்கியதோடு, குழந்தையின் கையை உடைத்ததாக உறவினர்கள் புகாரளித்தனர். அதன் பேரில், தமிழரசியை கைது செய்த போலீசார், வலது கையில் முறிவு ஏற்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்து காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY