"ஓலா" கால் -டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து விட்டு காருடன் தப்பித்த கும்பல்
செங்கல்பட்டில், ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து விட்டு காருடன் தப்பி சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வல்லம் பேருந்து நிலையம் அருகே கழுத்தறுக்கப்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அர்ஜூன் என்ற அந்த நபரின் டாக்சியை சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து ஓலா நிறுவனம் மூலம் புக் செய்த கும்பல், நள்ளிரவில் செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பகுதியில் வைத்து, அர்ஜுனின் கழுத்தில் கத்தியால் அறுத்து, சாலையில் தள்ளி விட்டு காருடன் தப்பி சென்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments