இலங்கையில் எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!
எரிபொருள் விலையேற்ற எதிரொலியால் இலங்கை முழுவதும் உள்ள உணவகங்களில் உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் உணவக உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பில், விற்பனையாளர்கள் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிற்றுண்டிகள் முதல் அனைத்து உணவகங்களிலும் விலை உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments